மோட்டார் சைக்கிளுடன் ஹயேஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகள் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் வென்னப்புவ புதிய வீதியில் கொரககாஸ் சந்தி பகுதியில் இன்று (17) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஹயேஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார். அத்துடன் மோட்டார் சைக்கிளில் அவருடன் பயணித்த மகளும் ஹயேஸ் சாரதியும் காயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் கொஸ்வத்தையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம சேவகர் என தெரியவந்துள்ளது.
விபத்திற்குள்ளான ஹயேஸ் வாகனத்தை வென்னப்புவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் பொறுப்பேற்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளுடன் மோதிய ஹயேஸ் ;தந்தை உயிரிழப்பு - மகள் காயம் மோட்டார் சைக்கிளுடன் ஹயேஸ் மோதி இடம்பெற்ற விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகள் காயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் வென்னப்புவ புதிய வீதியில் கொரககாஸ் சந்தி பகுதியில் இன்று (17) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற ஹயேஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார். அத்துடன் மோட்டார் சைக்கிளில் அவருடன் பயணித்த மகளும் ஹயேஸ் சாரதியும் காயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர் கொஸ்வத்தையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம சேவகர் என தெரியவந்துள்ளது. விபத்திற்குள்ளான ஹயேஸ் வாகனத்தை வென்னப்புவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் பொறுப்பேற்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.