• Aug 14 2025

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கைக்குண்டு அடையாளம்!

Chithra / Aug 13th 2025, 1:09 pm
image

 

யாழ்ப்பாணம் -  சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடக்கு புன்னாலைக்கட்டுவன் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த காணியானது 1990ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்டுள்ளது.


இந்நிலையில் குறித்த காணியை நேற்றையதினம் சுத்தம் செய்தவேளை கைக்குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது. 

இது குறித்த சுன்னாகம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சுன்னாகம் பொலிஸார் விடயத்தை மல்லாகம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த குண்டை மீட்டு செயலிழக்க விசேட அதிரடிப் படையினருக்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கைக்குண்டு அடையாளம்  யாழ்ப்பாணம் -  சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடக்கு புன்னாலைக்கட்டுவன் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.குறித்த காணியானது 1990ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த காணியை நேற்றையதினம் சுத்தம் செய்தவேளை கைக்குண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது. இது குறித்த சுன்னாகம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.சுன்னாகம் பொலிஸார் விடயத்தை மல்லாகம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த குண்டை மீட்டு செயலிழக்க விசேட அதிரடிப் படையினருக்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement