• Apr 15 2026

யாழ். மாநகர முதல்வரை சந்தித்த ஜேர்மனி, பிரான்ஸ் தூதுவர்கள்

Chithra / Feb 25th 2026, 10:39 am
image


யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் தூதுவர்கள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மதிவதனியைச் சந்தித்து தற்போதைய நிலவரம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.


யாழ்ப்பாணம் மாநகர சபை அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் இரு நாட்டுத் தூதுவர்கள், மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், பிரதி முதல்வர் ஆகியோருடன் பிரதம பொறியியலாளரும் கலந்துகொண்டனர்.


இச் சந்திப்பில், மாநகர சபை பகுதியில் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி, அதனை தீர்ப்பதற்கு சபை எதிர்நோக்கும் சவால் என்பவற்றுடன் உள்ளூராட்சி சபைகளின் செயல்பாட்டிற்கு மத்திய அரசின் உறுதுணை போன்றவற்றை கேட்டறிந்தனர்.


இதன்போது சபையில் நிலவும் முக்கிய இடர்பாடுகள் அரசியல் அழுத்தம் அல்லது அதிகார தலையீடுகள் போன்றவை ஏற்படின் அதற்கான காரணம் என்பவை தொடர்பிலும் மாநகர முதல்வரிடம் தூதுவர்கள் கேட்டறிந்தனர்.

யாழ். மாநகர முதல்வரை சந்தித்த ஜேர்மனி, பிரான்ஸ் தூதுவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் தூதுவர்கள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மதிவதனியைச் சந்தித்து தற்போதைய நிலவரம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.யாழ்ப்பாணம் மாநகர சபை அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் இரு நாட்டுத் தூதுவர்கள், மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், பிரதி முதல்வர் ஆகியோருடன் பிரதம பொறியியலாளரும் கலந்துகொண்டனர்.இச் சந்திப்பில், மாநகர சபை பகுதியில் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி, அதனை தீர்ப்பதற்கு சபை எதிர்நோக்கும் சவால் என்பவற்றுடன் உள்ளூராட்சி சபைகளின் செயல்பாட்டிற்கு மத்திய அரசின் உறுதுணை போன்றவற்றை கேட்டறிந்தனர்.இதன்போது சபையில் நிலவும் முக்கிய இடர்பாடுகள் அரசியல் அழுத்தம் அல்லது அதிகார தலையீடுகள் போன்றவை ஏற்படின் அதற்கான காரணம் என்பவை தொடர்பிலும் மாநகர முதல்வரிடம் தூதுவர்கள் கேட்டறிந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement