• Apr 15 2026

ஆபத்தில் 12,301 வீடுகள்: உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை

Chithra / Feb 25th 2026, 10:30 am
image

 

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள 12,301 வீடுகள் மக்கள் வசிப்பதற்குப் பொருத்தமானதல்ல என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள குறித்த 12,301 வீடுகளும் மக்கள் வாழ்வதற்கு பொருத்தமற்றது என்பதால் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட தொடருந்து பாதைகளைச் சீரமைப்பதற்குத் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தொடருந்து அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


தொடருந்து சேவையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கு உரிய திட்டங்கள் இல்லாதமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஆபத்தில் 12,301 வீடுகள்: உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை  அதிக ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள 12,301 வீடுகள் மக்கள் வசிப்பதற்குப் பொருத்தமானதல்ல என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் அமைந்துள்ள குறித்த 12,301 வீடுகளும் மக்கள் வாழ்வதற்கு பொருத்தமற்றது என்பதால் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட தொடருந்து பாதைகளைச் சீரமைப்பதற்குத் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தொடருந்து அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.தொடருந்து சேவையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கு உரிய திட்டங்கள் இல்லாதமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement