• Jul 16 2025

சிறைச்சாலை அலுவலரின் வீட்டுக்குள் அத்துமீறிய கும்பல்; பெற்றோல் ஊற்றி தீ வைத்து தப்பியோட்டம் - யாழில் சம்பவம்!

shanuja / Jul 15th 2025, 9:49 am
image

யாழ்ப்பாண சிறைச்சாலை  அலுவலரின்  வீட்டுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பியோடியுள்ளது. 


இந்த வன்முறைச் சம்பவம் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையில் இன்று (15) இடம்பெற்றுள்ளது. 


யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடமையாற்றும் அலுவலர் கொழும்புத்துறையில் வசித்து வரும் நிலையில்  அவரது  வீட்டுக்குள் வன்முறைக் கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. 


அலுவலரின் வீட்டார் உறங்கிக் கொண்டிருந்த வேளை வீட்டின் முன் பகுதிக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து விட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. 


வீடு தீப்பற்றி எரிந்ததை உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அவதானித்து உடனே எழுந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 


தீ வைத்து சிறிது நேரத்திற்குள்ளேயே வீட்டார் எழுந்து தீயை அணைத்ததால் வீட்டில் பெருமளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 


எனினும் வீட்டின் சில பகுதிகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிறைச்சாலை அலுவலரின் வீட்டுக்குள் அத்துமீறிய கும்பல்; பெற்றோல் ஊற்றி தீ வைத்து தப்பியோட்டம் - யாழில் சம்பவம் யாழ்ப்பாண சிறைச்சாலை  அலுவலரின்  வீட்டுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பியோடியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவம் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையில் இன்று (15) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடமையாற்றும் அலுவலர் கொழும்புத்துறையில் வசித்து வரும் நிலையில்  அவரது  வீட்டுக்குள் வன்முறைக் கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. அலுவலரின் வீட்டார் உறங்கிக் கொண்டிருந்த வேளை வீட்டின் முன் பகுதிக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து விட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. வீடு தீப்பற்றி எரிந்ததை உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அவதானித்து உடனே எழுந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ வைத்து சிறிது நேரத்திற்குள்ளேயே வீட்டார் எழுந்து தீயை அணைத்ததால் வீட்டில் பெருமளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. எனினும் வீட்டின் சில பகுதிகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement