நாட்டிற்கு எரிபொருள் வழங்க இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொடரும் மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் விசேட சலுகைத் திட்டமொன்றை பாராளுமன்றத்தில் இன்று முன்வைத்தார்.
குறித்த விசேட சலுகை தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏப்ரல் மாத நடுப்பகுதியில் கச்சா எண்ணெய் சரக்கு நாட்டிற்கு வந்து சேரும்.
தற்போது கச்சா எண்ணெயை ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள ஃபுஜைரா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறுகின்றோம்.
இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் காரணமாக, கோரப்பட்ட கச்சா எண்ணெய் சரக்குகள் தாமதமாகியுள்ளன. ஃபுஜைராவிலிருந்து ஒரு சரக்கும், மற்றொரு கச்சா எண்ணெய் சரக்கும் தாமதமாகியுள்ளது.
இருப்பினும், மூன்றாவது சரக்கு ஏப்ரல் மாத நடுப்பகுதியில், அதாவது 26 அல்லது 27 ஆம் திகதிக்குள் வந்து சேரும்.
மேலும், உலை எண்ணெய் சரக்கு ஒன்று ஏப்ரல் 13 அல்லது 14 ஆம் திகதிக்குள் வந்து சேரும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்தியா- சீனா- ரஷ்யாவுடன் எரிபொருள் பேச்சுவார்தை; தடையின்றி வழங்குவது எமது பொறுப்பு - ஜனாதிபதி நாட்டிற்கு எரிபொருள் வழங்க இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் தொடரும் மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் விசேட சலுகைத் திட்டமொன்றை பாராளுமன்றத்தில் இன்று முன்வைத்தார். குறித்த விசேட சலுகை தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாத நடுப்பகுதியில் கச்சா எண்ணெய் சரக்கு நாட்டிற்கு வந்து சேரும். தற்போது கச்சா எண்ணெயை ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள ஃபுஜைரா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறுகின்றோம். இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் காரணமாக, கோரப்பட்ட கச்சா எண்ணெய் சரக்குகள் தாமதமாகியுள்ளன. ஃபுஜைராவிலிருந்து ஒரு சரக்கும், மற்றொரு கச்சா எண்ணெய் சரக்கும் தாமதமாகியுள்ளது. இருப்பினும், மூன்றாவது சரக்கு ஏப்ரல் மாத நடுப்பகுதியில், அதாவது 26 அல்லது 27 ஆம் திகதிக்குள் வந்து சேரும். மேலும், உலை எண்ணெய் சரக்கு ஒன்று ஏப்ரல் 13 அல்லது 14 ஆம் திகதிக்குள் வந்து சேரும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.