• Jul 01 2025

உப்பு இறக்குமதியில் மோசடி - வர்த்த அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு!

shanuja / Jul 1st 2025, 9:01 am
image

உப்பு இறக்குமதியில் மோசடியுள்ளதாகத் தெரிவித்து வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக  நேற்று (30) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து  இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். 


75 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உப்பு தற்போது சந்தையில் 320 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்  சுட்டிக்காட்டியுள்ளனர். 


அதன்படி, உப்பு இறக்குமதி மூலம் பில்லியன் கணக்கான ரூபா  நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அந்த அமைப்புகள் மேலும் சுட்டிக்காட்டி குறித்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்.

உப்பு இறக்குமதியில் மோசடி - வர்த்த அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு உப்பு இறக்குமதியில் மோசடியுள்ளதாகத் தெரிவித்து வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக  நேற்று (30) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து  இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். 75 ரூபாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உப்பு தற்போது சந்தையில் 320 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்  சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி, உப்பு இறக்குமதி மூலம் பில்லியன் கணக்கான ரூபா  நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக அந்த அமைப்புகள் மேலும் சுட்டிக்காட்டி குறித்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement