ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் மாஸ்கோ நகர மக்கள், குளிர்கால இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் போன்ற தோற்றம் தெரிந்ததைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.
உண்மையான நிலவுக்கு இருபுறமும் பிரகாசமான ஒளிப்புள்ளிகள் தோன்றி, பார்ப்பதற்கு வானில் நான்கு நிலவுகள் இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கியது.
இந்த விசித்திரமான காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன.
இந்த நிகழ்வு குறித்து விளக்கமளித்துள்ள வானியல் விஞ்ஞானிகள், இது ஒரு அரிய வகை ஒளி மாயை என்றும், இதனை அறிவியல் ரீதியாக 'பாராசெலீன்' அல்லது 'போலி நிலவுகள் என்று அழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வளிமண்டலத்தின் மிக உயர்ந்த உயரத்தில் உள்ள 'சிரஸ்' மேகங்களில் காணப்படும் அறுகோண பனிப்படிகங்கள் வழியாக நிலவொளி ஊடுருவும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.
இந்த பனிப்படிகங்கள் நிலவொளியை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பிரதிபலித்து சிதறடிக்கின்றன.
இதன் விளைவாக, உண்மையான நிலவுக்கு இருபுறமும் நிலவைப் போன்றே பிரகாசிக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒளிப்புள்ளிகள் தோன்றுகின்றன.
வளிமண்டல அறிவியல் துறையின் ஆய்வுகளின்படி, இத்தகைய நிகழ்வுகள் மிகவும் குளிர்ந்த இரவுகளில், மெல்லிய மேகக்கூட்டங்கள் இருக்கும்போது மட்டுமே நிகழும். பல மணிநேரம் நீடித்த இந்த அதிசயக் காட்சி, வானியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திடீரென வானில் தோன்றிய நான்கு நிலவுகள்-வியந்து பார்த்த மக்கள் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் மாஸ்கோ நகர மக்கள், குளிர்கால இரவு வானில் ஒரே நேரத்தில் நான்கு நிலவுகள் போன்ற தோற்றம் தெரிந்ததைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.உண்மையான நிலவுக்கு இருபுறமும் பிரகாசமான ஒளிப்புள்ளிகள் தோன்றி, பார்ப்பதற்கு வானில் நான்கு நிலவுகள் இருப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கியது.இந்த விசித்திரமான காட்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன.இந்த நிகழ்வு குறித்து விளக்கமளித்துள்ள வானியல் விஞ்ஞானிகள், இது ஒரு அரிய வகை ஒளி மாயை என்றும், இதனை அறிவியல் ரீதியாக 'பாராசெலீன்' அல்லது 'போலி நிலவுகள் என்று அழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.வளிமண்டலத்தின் மிக உயர்ந்த உயரத்தில் உள்ள 'சிரஸ்' மேகங்களில் காணப்படும் அறுகோண பனிப்படிகங்கள் வழியாக நிலவொளி ஊடுருவும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.இந்த பனிப்படிகங்கள் நிலவொளியை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பிரதிபலித்து சிதறடிக்கின்றன.இதன் விளைவாக, உண்மையான நிலவுக்கு இருபுறமும் நிலவைப் போன்றே பிரகாசிக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒளிப்புள்ளிகள் தோன்றுகின்றன.வளிமண்டல அறிவியல் துறையின் ஆய்வுகளின்படி, இத்தகைய நிகழ்வுகள் மிகவும் குளிர்ந்த இரவுகளில், மெல்லிய மேகக்கூட்டங்கள் இருக்கும்போது மட்டுமே நிகழும். பல மணிநேரம் நீடித்த இந்த அதிசயக் காட்சி, வானியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.https://www.facebook.com/share/v/14U45ixE9SA/