அவுஸ்திரேலியாவின் கடற்கரைப் பகுதியில் பலத்த காற்று காரணமாக நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்ட தனது தாய் மற்றும் இரண்டு உடன்பிறப்புகளின் உயிரைக் காப்பாற்ற, 13 வயது சிறுவன் ஒருவன் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சீற்றமான அலைகளுக்கு மத்தியில் நீந்தி வந்து உயிர்களைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு அவுஸ்திரேலியாவின் ஜியோகிராஃப் விரிகுடா பகுதியில், ஒரு தாய் தனது 12 வயது மகன் மற்றும் 8 வயது மகளுடன் பேடில்போர்டிங் செய்துகொண்டிருந்த போது, திடீரென வீசிய பலத்த காற்றினால் அவர்களின் மிதவைகள் கரையை விட்டு வெகுதூரம் அடித்துச் செல்லப்பட்டன.
குடும்பம் ஆபத்தில் சிக்கியிருப்பதை உணர்ந்த மூத்த மகனான 13 வயது சிறுவன், உதவி கோருவதற்காக கரையை நோக்கி தனது கயாக் படகில் செல்ல முயன்றான். ஆனால் படகிற்குள் நீர் புகுந்ததால், அதனை கைவிட்டு கடலில் நீந்தத் தொடங்கினான்.
சுமார் 4 கி.மீதூரத்தை அவன் நீந்திக் கடந்தான். முதலில் இரண்டு மணிநேரம் உயிர்காப்பு அங்கி அணிந்து நீந்திய அவன், அது தனது வேகத்தைத் தடுப்பதாக உணர்ந்து, அங்கியை அகற்றிவிட்டு அடுத்த இரண்டு மணிநேரம் அங்கி இல்லாமலேயே நீந்தி கரையை அடைந்தான்.
இதனிடையே, நடுக்கடலில் ஒரு பேடில்போர்டைப் பிடித்துக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்த தாய் மற்றும் மற்ற இரண்டு குழந்தைகளை மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
“அச்சிறுவனின் உறுதியும் துணிச்சலும் இல்லையென்றால், இன்று அந்தத் தாயும் குழந்தைகளும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள்”என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நடுக்கடலில் உயிருக்கு போராடிய தாய், உடன்பிறப்புகள்;காப்பாற்ற ஹீரோவாக மாறிய சிறுவன் https://www.facebook.com/share/v/1CCpEanipM/அவுஸ்திரேலியாவின் கடற்கரைப் பகுதியில் பலத்த காற்று காரணமாக நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்ட தனது தாய் மற்றும் இரண்டு உடன்பிறப்புகளின் உயிரைக் காப்பாற்ற, 13 வயது சிறுவன் ஒருவன் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சீற்றமான அலைகளுக்கு மத்தியில் நீந்தி வந்து உயிர்களைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு அவுஸ்திரேலியாவின் ஜியோகிராஃப் விரிகுடா பகுதியில், ஒரு தாய் தனது 12 வயது மகன் மற்றும் 8 வயது மகளுடன் பேடில்போர்டிங் செய்துகொண்டிருந்த போது, திடீரென வீசிய பலத்த காற்றினால் அவர்களின் மிதவைகள் கரையை விட்டு வெகுதூரம் அடித்துச் செல்லப்பட்டன.குடும்பம் ஆபத்தில் சிக்கியிருப்பதை உணர்ந்த மூத்த மகனான 13 வயது சிறுவன், உதவி கோருவதற்காக கரையை நோக்கி தனது கயாக் படகில் செல்ல முயன்றான். ஆனால் படகிற்குள் நீர் புகுந்ததால், அதனை கைவிட்டு கடலில் நீந்தத் தொடங்கினான்.சுமார் 4 கி.மீதூரத்தை அவன் நீந்திக் கடந்தான். முதலில் இரண்டு மணிநேரம் உயிர்காப்பு அங்கி அணிந்து நீந்திய அவன், அது தனது வேகத்தைத் தடுப்பதாக உணர்ந்து, அங்கியை அகற்றிவிட்டு அடுத்த இரண்டு மணிநேரம் அங்கி இல்லாமலேயே நீந்தி கரையை அடைந்தான்.இதனிடையே, நடுக்கடலில் ஒரு பேடில்போர்டைப் பிடித்துக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்த தாய் மற்றும் மற்ற இரண்டு குழந்தைகளை மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.“அச்சிறுவனின் உறுதியும் துணிச்சலும் இல்லையென்றால், இன்று அந்தத் தாயும் குழந்தைகளும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள்”என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்.