• Jul 13 2026

12 பிள்ளைகள், 325 வாரிசுகள்; 114 ஆண்டுகால வாழ்க்கைக்கு விடை கொடுத்த களுமெனிகே!

Chithra / Jul 13th 2026, 12:35 pm
image


அநுராதபுரம் மாவட்டம், சங்கிலி கனதராவ பகுதியைச் சேர்ந்தவரும், இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவராகக் கருதப்பட்டவருமான புஞ்சாகே களுமெனிகே  (Punchage Kalumenike) தனது 114 ஆவது வயதில் காலமானார்.


1912 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி பிறந்த களுமெனிகே, இவ்வாண்டின் தொடக்கத்தில் தனது 114 ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.


பிறந்தநாளைத் தொடர்ந்து சில நாட்களில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்த அவர், பின்னர் அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.


அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சுமார் இரண்டு மாதங்கள் உயிருடன் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனது நீண்ட ஆயுளின் மூலம் பல தலைமுறைகளைக் கண்ட களுமெனிகே, 12 பிள்ளைகளின் தாயாக இருந்ததுடன், கொள்ளுப் பேரக் குழந்தைகள் மற்றும் எள்ளுப் பேரக் குழந்தைகள் உட்பட மொத்தம் 325 வாரிசுகளை கொண்ட மிகப்பெரிய குடும்ப பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்.

12 பிள்ளைகள், 325 வாரிசுகள்; 114 ஆண்டுகால வாழ்க்கைக்கு விடை கொடுத்த களுமெனிகே அநுராதபுரம் மாவட்டம், சங்கிலி கனதராவ பகுதியைச் சேர்ந்தவரும், இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவராகக் கருதப்பட்டவருமான புஞ்சாகே களுமெனிகே  (Punchage Kalumenike) தனது 114 ஆவது வயதில் காலமானார்.1912 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி பிறந்த களுமெனிகே, இவ்வாண்டின் தொடக்கத்தில் தனது 114 ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.பிறந்தநாளைத் தொடர்ந்து சில நாட்களில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்த அவர், பின்னர் அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சுமார் இரண்டு மாதங்கள் உயிருடன் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தனது நீண்ட ஆயுளின் மூலம் பல தலைமுறைகளைக் கண்ட களுமெனிகே, 12 பிள்ளைகளின் தாயாக இருந்ததுடன், கொள்ளுப் பேரக் குழந்தைகள் மற்றும் எள்ளுப் பேரக் குழந்தைகள் உட்பட மொத்தம் 325 வாரிசுகளை கொண்ட மிகப்பெரிய குடும்ப பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement