முன்பள்ளி நிகழ்வொன்றில் நடனமாடிக்கொண்டிருந்த சிறுமிகள், விழா நடுவே புகையடித்தபோது புகையைக் கண்டு பயந்து அழுது ஓடும் காணொளி வைரலாகியுள்ளது.
இந்தச் சம்பவம் சக்ஸஸ் விங்ஸ் முன்பள்ளியில் பதிவாகியுள்ளது. குறித்த முன்பள்ளியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றது.
அந்த நிகழ்வில் இரண்டு சிறுமிகள் நடனமாடுவதற்காக அழகாக அலங்காரம் செய்து மேடையில் சென்றனர். பின்னர் இருவரும் நடனமாடி ஆரம்பித்தனர்.
தற்போது விழாக்களின் இடைநடுவே புகையடிப்பது வழமையான செயற்பாடாகக் காணப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த நிகழ்விலும் சிறுமிகளின் நடனத்திற்கு இடையே புகையடித்துள்ளனர். எனினும் புகையைக் கண்டதும் சிறுமி ஒருவர் சட்டென்று பயந்து அழுதுகொண்டு ஓடினார்.
அவர் ஓடுவதைக் கண்டதும் மற்றைய சிறுமியும் பயத்தில் அழ ஆரம்பித்துள்ளார். பின்னர் அங்கு நின்ற ஆசரியர் குறித்த சிறுமியைக் கட்டியணைத்து ஆரத்தழுவினார்.
சிறுவர்களின் நிகழ்வில் புகையடிப்பது பயிற்சியின் போதும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அவ்வாறில்லையெனில் சிறுவர்கள் நிகழ்வில் புகையடிப்பதை தவிர்க்க வேண்டும் போன்றதான கருத்துக்களைப் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
புகையைக் கண்டதும் சிறுமிகள் இருவரும் பயத்தில் அழுதுகொண்டு ஓடும் காட்சி பார்ப்பவர்களை இரசிக்க வைத்துள்ளது.
ஐயையோ புகையை அடிச்சிட்டீங்களே மேடையில் சிதறி ஓடிய குழந்தைகளின் க்யூட் காட்சி முன்பள்ளி நிகழ்வொன்றில் நடனமாடிக்கொண்டிருந்த சிறுமிகள், விழா நடுவே புகையடித்தபோது புகையைக் கண்டு பயந்து அழுது ஓடும் காணொளி வைரலாகியுள்ளது. இந்தச் சம்பவம் சக்ஸஸ் விங்ஸ் முன்பள்ளியில் பதிவாகியுள்ளது. குறித்த முன்பள்ளியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றது. அந்த நிகழ்வில் இரண்டு சிறுமிகள் நடனமாடுவதற்காக அழகாக அலங்காரம் செய்து மேடையில் சென்றனர். பின்னர் இருவரும் நடனமாடி ஆரம்பித்தனர். தற்போது விழாக்களின் இடைநடுவே புகையடிப்பது வழமையான செயற்பாடாகக் காணப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த நிகழ்விலும் சிறுமிகளின் நடனத்திற்கு இடையே புகையடித்துள்ளனர். எனினும் புகையைக் கண்டதும் சிறுமி ஒருவர் சட்டென்று பயந்து அழுதுகொண்டு ஓடினார். அவர் ஓடுவதைக் கண்டதும் மற்றைய சிறுமியும் பயத்தில் அழ ஆரம்பித்துள்ளார். பின்னர் அங்கு நின்ற ஆசரியர் குறித்த சிறுமியைக் கட்டியணைத்து ஆரத்தழுவினார். சிறுவர்களின் நிகழ்வில் புகையடிப்பது பயிற்சியின் போதும் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அவ்வாறில்லையெனில் சிறுவர்கள் நிகழ்வில் புகையடிப்பதை தவிர்க்க வேண்டும் போன்றதான கருத்துக்களைப் பலர் பதிவிட்டு வருகின்றனர். புகையைக் கண்டதும் சிறுமிகள் இருவரும் பயத்தில் அழுதுகொண்டு ஓடும் காட்சி பார்ப்பவர்களை இரசிக்க வைத்துள்ளது.