• Aug 08 2025

எரிபொருளுக்கு அளவுக்கு அதிகமாக நிதி பெற்ற முன்னாள் முதலமைச்சர் - எடுக்கப்பட்ட நடவடிக்கை

Chithra / Aug 8th 2025, 10:31 am
image


சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள், அளவுக்கு மேலதிகமாக நிதி வழங்கப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. 

அதன்படி அவருக்கு அளவுக்கு மேலதிகமாக 7,730,262 ரூபாய் நிதி வழங்கப்பட்டிருப்பதாக  தெரியவந்துள்ளது. 

2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் இடம்பெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய கோபா குழுவிலேயே, இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

இதன்படி, சபரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சரின் 3 வாகனங்களுக்கான 1700 லீற்றர் எரிபொருள்களுக்காக 2014 ஆம் ஆண்டு முதல் 9,850,170 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஒரு மாத காலத்திற்குள், இது குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும், வரையறையை மீறிப் பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது.


எரிபொருளுக்கு அளவுக்கு அதிகமாக நிதி பெற்ற முன்னாள் முதலமைச்சர் - எடுக்கப்பட்ட நடவடிக்கை சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள், அளவுக்கு மேலதிகமாக நிதி வழங்கப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. அதன்படி அவருக்கு அளவுக்கு மேலதிகமாக 7,730,262 ரூபாய் நிதி வழங்கப்பட்டிருப்பதாக  தெரியவந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் இடம்பெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய கோபா குழுவிலேயே, இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, சபரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சரின் 3 வாகனங்களுக்கான 1700 லீற்றர் எரிபொருள்களுக்காக 2014 ஆம் ஆண்டு முதல் 9,850,170 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரு மாத காலத்திற்குள், இது குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும், வரையறையை மீறிப் பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement