• Nov 21 2025

மாவீரர் வாரத்தின் முதல் நாள்; கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி

Chithra / Nov 21st 2025, 9:26 am
image


மாவீரர் வாரம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

அந்தவகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர் வாரத்தின் முதல்நாளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலிகளைச் செலுத்தினார். 

அந்தவகையில் மாவீரர் துயிலமில்லத்தினைத் தாங்கிய உருவப்படத்திற்கு சுடரேரற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளைச் செலுத்தினார். 

2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கென தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கொழும்பில் தங்கியுள்ள நிலையில்,  இவ்வாறு மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மாவீரர் வாரத்தின் முதல் நாள்; கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி மாவீரர் வாரம் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர் வாரத்தின் முதல்நாளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலிகளைச் செலுத்தினார். அந்தவகையில் மாவீரர் துயிலமில்லத்தினைத் தாங்கிய உருவப்படத்திற்கு சுடரேரற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளைச் செலுத்தினார். 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கான நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கென தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கொழும்பில் தங்கியுள்ள நிலையில்,  இவ்வாறு மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement