கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொலிஸ் நிலையத்தின் பெயர் பலகை உள்ளிட்ட சில பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவியது.
பொலிஸ் நிலைய வளாகத்தில் இருந்த குப்பைகளை பொலிஸார் எரித்த போது, அந்தத் தீ எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பெயர் பலகை மற்றும் மா மரத்தில் பற்றி எரிந்துள்ளது.
இந்த விபத்தில் பொலிஸ் நிலையப் பெயர் பலகை முற்றாக எரிந்ததுடன், வழக்கொன்றின் சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றும் தீக்கிரையாகியுள்ளது.
யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து; பெயர்பலகை, படகொன்றும் எரிந்து நாசம் கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொலிஸ் நிலையத்தின் பெயர் பலகை உள்ளிட்ட சில பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவியது. பொலிஸ் நிலைய வளாகத்தில் இருந்த குப்பைகளை பொலிஸார் எரித்த போது, அந்தத் தீ எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பெயர் பலகை மற்றும் மா மரத்தில் பற்றி எரிந்துள்ளது.இந்த விபத்தில் பொலிஸ் நிலையப் பெயர் பலகை முற்றாக எரிந்ததுடன், வழக்கொன்றின் சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றும் தீக்கிரையாகியுள்ளது.யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.