• May 23 2026

வைக்கோலுக்கு வைத்த தீ பரவியதில் விவசாயி பலி

Chithra / Oct 4th 2025, 12:41 pm
image


பொலன்னறுவை - ஹிங்குரக்கொடை, வராஹேன பகுதியில் விவசாயி ஒருவர் நேற்று அவரது வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தீ விபத்தில் உயிரிழந்த நபர், ஹிங்குரக்கொடை போகஸ் சந்தி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

அவர், வரும் போகத்திற்காக நெல் வயலைத் தயார் செய்யும் நோக்கில், அறுவடை செய்த பின்னர் மீதமுள்ள வைக்கோலுக்கு தீ வைத்துள்ளார். 

இந்நிலையில், காற்று வீச்சால் தீ பரவி, அவர் அதில் சிக்கியுள்ளார்.

அவர் தீயில் சிக்கியதை கண்ட அப்பகுதியில் வசித்த ஒருவர், மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையிலும் அவர் ஏற்கனவே பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைகளுக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹிங்குரக்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 

வைக்கோலுக்கு வைத்த தீ பரவியதில் விவசாயி பலி பொலன்னறுவை - ஹிங்குரக்கொடை, வராஹேன பகுதியில் விவசாயி ஒருவர் நேற்று அவரது வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்துள்ளார்.தீ விபத்தில் உயிரிழந்த நபர், ஹிங்குரக்கொடை போகஸ் சந்தி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.அவர், வரும் போகத்திற்காக நெல் வயலைத் தயார் செய்யும் நோக்கில், அறுவடை செய்த பின்னர் மீதமுள்ள வைக்கோலுக்கு தீ வைத்துள்ளார். இந்நிலையில், காற்று வீச்சால் தீ பரவி, அவர் அதில் சிக்கியுள்ளார்.அவர் தீயில் சிக்கியதை கண்ட அப்பகுதியில் வசித்த ஒருவர், மற்றவர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையிலும் அவர் ஏற்கனவே பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைகளுக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹிங்குரக்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement