மொனராகலையிலுள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக காயமடைந்த சிசிச்சை பெற்று வந்த நிலையில் தாயை அடுத்து மகளும் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஜே.எம். ஒனெல்யா என்ற 03 வயதுடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி புத்தல-மொனராகலை வீதியில் உள்ள அரச தானியக் கடைக்கு அருகில் அமைந்துள்ள இந்த வீட்டின் ஒரு அறையில் தீப்பரவல் ஏற்பட்டதாக புத்தல பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அங்கிருந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகினர்.
அவர்களின் சத்தம் கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அருகிலுள்ள அரச தானியக் கடையின் மேலாளர் மற்றும் அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்த்தனர்.
தீ விபத்தில் காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சுராஜி சகுந்தலா 26 வயதான தாய் சம்பவதினத்தன்று உயிரிழந்தார்.
கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று மாலை உயிரிழந்தார்.
தந்தை தொடர்ந்தும் கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய குடும்பம்; தாயை அடுத்து 03 வயது மகளும் பலி மொனராகலையிலுள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக காயமடைந்த சிசிச்சை பெற்று வந்த நிலையில் தாயை அடுத்து மகளும் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் ஜே.எம். ஒனெல்யா என்ற 03 வயதுடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.கடந்த 16 ஆம் திகதி புத்தல-மொனராகலை வீதியில் உள்ள அரச தானியக் கடைக்கு அருகில் அமைந்துள்ள இந்த வீட்டின் ஒரு அறையில் தீப்பரவல் ஏற்பட்டதாக புத்தல பொலிசார் தெரிவித்தனர்.இந்நிலையில், அங்கிருந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகினர்.அவர்களின் சத்தம் கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அருகிலுள்ள அரச தானியக் கடையின் மேலாளர் மற்றும் அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்த்தனர். தீ விபத்தில் காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கராபிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சுராஜி சகுந்தலா 26 வயதான தாய் சம்பவதினத்தன்று உயிரிழந்தார்.கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று மாலை உயிரிழந்தார்.தந்தை தொடர்ந்தும் கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.