• Aug 31 2025

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்றும் செம்மணி அகழ்வுகள் தொடரும்

Aathira / Aug 30th 2025, 8:02 am
image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான  இன்றும் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வுகள்  முன்னெடுக்கப்படவுள்ளன. 

இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு நடவடிக்கைகள் கடந்த திங்கட்கிழமை முதல் இடம்பெற்று வருகின்றன. 

இதுவரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 187 மனித என்புக்கூட்டு தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன. 

அவற்றில் 174 மனித என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

நேற்றைய தினம் 10 என்புக்கூடுகள் வெளிப்பட்டதுடன் 10 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. 

அதில்,  ஒரு பெரிய என்புக்கூட்டு தொகுதி, மற்றுமொரு சிறிய என்புக்கூட்டுத் தொகுதியை கட்டியணைத்தவாறு அடையாளம் காணப்பட்டது. 

எனினும் அவற்றை முற்றாக அகழ்ந்தெடுத்ததன் பின்னர் பெறப்படும் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே அவை குறித்து உறுதியாகக் கூறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்றும் செம்மணி அகழ்வுகள் தொடரும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான  இன்றும் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வுகள்  முன்னெடுக்கப்படவுள்ளன. இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு நடவடிக்கைகள் கடந்த திங்கட்கிழமை முதல் இடம்பெற்று வருகின்றன. இதுவரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது 187 மனித என்புக்கூட்டு தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன. அவற்றில் 174 மனித என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் 10 என்புக்கூடுகள் வெளிப்பட்டதுடன் 10 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. அதில்,  ஒரு பெரிய என்புக்கூட்டு தொகுதி, மற்றுமொரு சிறிய என்புக்கூட்டுத் தொகுதியை கட்டியணைத்தவாறு அடையாளம் காணப்பட்டது. எனினும் அவற்றை முற்றாக அகழ்ந்தெடுத்ததன் பின்னர் பெறப்படும் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையின் பிரகாரமே அவை குறித்து உறுதியாகக் கூறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement