எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் மின்கட்டணம் மீண்டும் உயர்டையும். அது கடினமானதாகவும் அமையும் என மின்சாரத்துறை மறுசீரமைப்பு செயலக அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷன் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது,
எரிபொருள் தட்டுப்பாடு, வறட்சியான காலநிலை மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு ஆகிய காரணிகளால் மின்கட்டணம் தற்போது அதிகரிக்கப்படவில்லை.
மின்கட்டண திருத்தம் தொடர்பில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட திருத்த யோசனைக்கு அமைவாகவே தற்போது 10 சதவீதத்தால் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் மின்கட்டணம் மீண்டும் உயர்டையும். அது கடினமானதாகவும் அமையும்.
ஆகவே மின்கட்டண அதிகரிப்பால் ஏற்படும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கு மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை மேம்படுத்துவதற்கு புதிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. புதிய முதலீடுகளை நிறுவன கட்டமைப்பின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
நிலக்கரி நெருக்கடியால் மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க நேரிடும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் மின்கட்டணம் மீண்டும் உயர்டையும். அது கடினமானதாகவும் அமையும் என மின்சாரத்துறை மறுசீரமைப்பு செயலக அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது,எரிபொருள் தட்டுப்பாடு, வறட்சியான காலநிலை மற்றும் நிலக்கரி தட்டுப்பாடு ஆகிய காரணிகளால் மின்கட்டணம் தற்போது அதிகரிக்கப்படவில்லை.மின்கட்டண திருத்தம் தொடர்பில் மூன்று மாதங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட திருத்த யோசனைக்கு அமைவாகவே தற்போது 10 சதவீதத்தால் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் மின்கட்டணம் மீண்டும் உயர்டையும். அது கடினமானதாகவும் அமையும்.ஆகவே மின்கட்டண அதிகரிப்பால் ஏற்படும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கு மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை மேம்படுத்துவதற்கு புதிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. புதிய முதலீடுகளை நிறுவன கட்டமைப்பின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.