• Apr 17 2026

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம்!

Chithra / Apr 4th 2026, 10:38 am
image

இன்று (04) காலை 8 மணி முதல் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.


வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முடிவு, இன்று நடைபெறவுள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க தெரிவித்தார்.


வைத்தியர்களின் இடமாற்றச் செயல்முறை அரசியல்மயமாக்கப்படுவதாகக் கூறப்படுவதைக் கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த வாரம் ஏற்கெனவே இரண்டு முறை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.


தனது முந்தைய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அதிகாரிகள் அளித்த எதிர்மறையான பதிலைக் கருத்தில் கொண்டே, வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் தொடங்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் வைத்தியர் சாமில் விஜேசிங்க மேலும் குறிப்பிட்டார்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (04) காலை 8 மணி முதல் நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான முடிவு, இன்று நடைபெறவுள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க தெரிவித்தார்.வைத்தியர்களின் இடமாற்றச் செயல்முறை அரசியல்மயமாக்கப்படுவதாகக் கூறப்படுவதைக் கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த வாரம் ஏற்கெனவே இரண்டு முறை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.தனது முந்தைய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அதிகாரிகள் அளித்த எதிர்மறையான பதிலைக் கருத்தில் கொண்டே, வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் தொடங்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் வைத்தியர் சாமில் விஜேசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement