• Aug 20 2025

அநுரவின் அதிரடியால் ஆறு கட்சித் தலைவர்கள் உட்பட 499 பேர் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும்!

Chithra / Aug 19th 2025, 12:45 pm
image

நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவால், ஆறு கட்சித் தலைவர்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை இழப்பார்கள் என்று நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, விமல் வீரவன்ச, டி.டபிள்யூ. குணசேகர, திஸ்ஸ விதாரண மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட ஆறு கட்சித் தலைவர்கள் தங்கள் ஓய்வூதியத்தை இழப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமார் என 499 பேர் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமார் 150 பேர் ஓய்வூதியம் பெறுவதாக அவர் தெரிவித்தார்.

வேறு தொழில்கள் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை பறிப்பது மனித உரிமை மீறல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஓய்வூதியங்களை ரத்து செய்வதற்கு முன்னர், அரசாங்கத்தை இருமுறை சிந்திக்க வேண்டும் எனவும் பிரேமசிறி மானகே கோரியுள்ளார்.

அநுரவின் அதிரடியால் ஆறு கட்சித் தலைவர்கள் உட்பட 499 பேர் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவால், ஆறு கட்சித் தலைவர்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை இழப்பார்கள் என்று நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.அதன்படி, விமல் வீரவன்ச, டி.டபிள்யூ. குணசேகர, திஸ்ஸ விதாரண மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட ஆறு கட்சித் தலைவர்கள் தங்கள் ஓய்வூதியத்தை இழப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமார் என 499 பேர் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே தெரிவித்தார்.மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமார் 150 பேர் ஓய்வூதியம் பெறுவதாக அவர் தெரிவித்தார்.வேறு தொழில்கள் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை பறிப்பது மனித உரிமை மீறல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே, ஓய்வூதியங்களை ரத்து செய்வதற்கு முன்னர், அரசாங்கத்தை இருமுறை சிந்திக்க வேண்டும் எனவும் பிரேமசிறி மானகே கோரியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement