• Aug 16 2025

கர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு! - வவுனியா பிரதேச சபைதலைவர்கள் அறிவிப்பு

shanuja / Aug 16th 2025, 8:36 pm
image

எதிர்வரும் திங்கள்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலுக்கு தங்களது முழுமையான ஆதரவினை வழங்குவதாக   வவுனியா வடக்கு தமிழ் தெற்கு மற்றும் செட்டிகுளம் பிரதேசசபைகளின் தவிசாளர்கள் அறிவித்துள்ளனர்.


வடகிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது


குறித்த கர்த்தாலுக்கு தமது பூரண ஆதரவினை வழங்குவதாக வவுனியாதெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன், செட்டிகுளம் பிரதேசசபையின் தவிசாளர் தாஜூதீன் முகமதுஇம்தியாஸ்,வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி, ஆகியோர் தமது முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளனர். 


அத்துடன் தங்களது பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர்கள்,மற்றும் ஏனைய தரப்புக்களும் குறித்த கர்த்தாலுக்கான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு - வவுனியா பிரதேச சபைதலைவர்கள் அறிவிப்பு எதிர்வரும் திங்கள்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலுக்கு தங்களது முழுமையான ஆதரவினை வழங்குவதாக   வவுனியா வடக்கு தமிழ் தெற்கு மற்றும் செட்டிகுளம் பிரதேசசபைகளின் தவிசாளர்கள் அறிவித்துள்ளனர்.வடகிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுகுறித்த கர்த்தாலுக்கு தமது பூரண ஆதரவினை வழங்குவதாக வவுனியாதெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன், செட்டிகுளம் பிரதேசசபையின் தவிசாளர் தாஜூதீன் முகமதுஇம்தியாஸ்,வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி, ஆகியோர் தமது முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளனர். அத்துடன் தங்களது பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர்கள்,மற்றும் ஏனைய தரப்புக்களும் குறித்த கர்த்தாலுக்கான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement