தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களைச் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான பிக்குவை மே 2-ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 22 பிக்குகளின் பயணப்பொதிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதன்போது, சுமார் 112 கிலோகிராம் எடையுள்ள "குஷ்" (Kush) மற்றும் "ஹேஷ்" (Hash) வகை போதைப்பொருட்கள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட 22 பிக்குகளும் இன்று மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்தக் கடத்தல் கும்பலை வழிநடத்திய பிரதான நபரான கடவத்தை ரம்முத்துகல ஸ்ரீ புண்யாலங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணுகொலே அமிதானந்த எனும் பிக்கு, விமான நிலையத்தில் போதைப்பொருள் சிக்கியதைக் கண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
மிரிஸ்வத்தை பகுதியில் மறைந்திருந்த இவரைப் பொலிஸார் விசேட தேடுதல் வேட்டை மூலம் நேற்று (26) கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட அமிதானந்த பிக்கு, போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இளம் பிக்குகளைத் தாய்லாந்து சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, இந்தக் கடத்தல் நடவடிக்கையை ஒருங்கிணைக்க ஒரு 'WhatsApp' குழுவை இவரே இயக்கி வந்துள்ளார்.
இவரை எதிர்வரும் மே 2-ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர அனுமதி வழங்கியுள்ளார்.
கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இந்தச் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல்: பிரதான மூளையாகச் செயல்பட்ட பிக்குவை தடுத்து வைக்க உத்தரவு தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களைச் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை வழிநடத்திய பிரதான சந்தேகநபரான பிக்குவை மே 2-ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 22 பிக்குகளின் பயணப்பொதிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதன்போது, சுமார் 112 கிலோகிராம் எடையுள்ள "குஷ்" (Kush) மற்றும் "ஹேஷ்" (Hash) வகை போதைப்பொருட்கள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட 22 பிக்குகளும் இன்று மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இந்தக் கடத்தல் கும்பலை வழிநடத்திய பிரதான நபரான கடவத்தை ரம்முத்துகல ஸ்ரீ புண்யாலங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணுகொலே அமிதானந்த எனும் பிக்கு, விமான நிலையத்தில் போதைப்பொருள் சிக்கியதைக் கண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். மிரிஸ்வத்தை பகுதியில் மறைந்திருந்த இவரைப் பொலிஸார் விசேட தேடுதல் வேட்டை மூலம் நேற்று (26) கைது செய்தனர்.விசாரணையில் கைது செய்யப்பட்ட அமிதானந்த பிக்கு, போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இளம் பிக்குகளைத் தாய்லாந்து சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, இந்தக் கடத்தல் நடவடிக்கையை ஒருங்கிணைக்க ஒரு 'WhatsApp' குழுவை இவரே இயக்கி வந்துள்ளார்.இவரை எதிர்வரும் மே 2-ஆம் திகதி வரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபாணி அபேசேகர அனுமதி வழங்கியுள்ளார்.கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இந்தச் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.