• May 29 2025

கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்; வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

Chithra / May 27th 2025, 1:45 pm
image


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிக்கையானது நாளை (28) வரை சிலாபம் முதல் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் ஊடாக காங்கேசன்துறை ஊடாகவும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரப் பகுதிகளிலும் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60 - 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். 

இந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே நேரத்தில்,  மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை  நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 


கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்; வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த அறிக்கையானது நாளை (28) வரை சிலாபம் முதல் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் ஊடாக காங்கேசன்துறை ஊடாகவும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரப் பகுதிகளிலும் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60 - 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதே நேரத்தில்,  மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை  நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement