• Nov 21 2025

அறுவடைக்குத் தயாரான கடலைச் செய்கையில் நோய் தாக்கம் - விவசாயிகளுக்கு பெரும் இழப்பு

Chithra / Nov 21st 2025, 9:18 am
image

 

திருகோணமலை - கிண்ணியாவில் கச்சான் பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்படவுள்ள நிலையில், நோய் தாக்கம் காரணமாகச் செய்கை அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.  

கிண்ணியா, மனியரசன் குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட கச்சான் பயிர்ச்செய்கை, தற்போது அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்படுகின்றது. எனினும், ஒரு சில இடங்களில் கச்சான் பயிரில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மனியரசன் குளம் பகுதியில் அதிகளவான விவசாயிகள் கச்சான் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும் உழைப்பையும் முதலீட்டையும் செலவிட்டுப் பயிரிடப்பட்ட இந்தக் கச்சான் பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்படவுள்ள நிலையில், நோய் தாக்கம் காரணமாகச் செய்கை அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

நோய் தாக்கம் கட்டுப்படுத்தப்படாவிட்டால், பெரும் பொருளாதார இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் திடீர் நோய்த்தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அறுவடையைப் பாதுகாக்கவும் உரிய விவசாயத் துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளையும், அவசியமான உதவிகளையும் வழங்குவதன் மூலம் தாம் பெரும் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கப்படலாம் எனவும் அவர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.



அறுவடைக்குத் தயாரான கடலைச் செய்கையில் நோய் தாக்கம் - விவசாயிகளுக்கு பெரும் இழப்பு  திருகோணமலை - கிண்ணியாவில் கச்சான் பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்படவுள்ள நிலையில், நோய் தாக்கம் காரணமாகச் செய்கை அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.  கிண்ணியா, மனியரசன் குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட கச்சான் பயிர்ச்செய்கை, தற்போது அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்படுகின்றது. எனினும், ஒரு சில இடங்களில் கச்சான் பயிரில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.மனியரசன் குளம் பகுதியில் அதிகளவான விவசாயிகள் கச்சான் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.பெரும் உழைப்பையும் முதலீட்டையும் செலவிட்டுப் பயிரிடப்பட்ட இந்தக் கச்சான் பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்படவுள்ள நிலையில், நோய் தாக்கம் காரணமாகச் செய்கை அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில்,நோய் தாக்கம் கட்டுப்படுத்தப்படாவிட்டால், பெரும் பொருளாதார இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.இந்தத் திடீர் நோய்த்தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அறுவடையைப் பாதுகாக்கவும் உரிய விவசாயத் துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளையும், அவசியமான உதவிகளையும் வழங்குவதன் மூலம் தாம் பெரும் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கப்படலாம் எனவும் அவர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement