• May 17 2025

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சித் தலைவருடன் நாளை கலந்துரையாடல்

Chithra / May 16th 2025, 8:14 am
image


உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளனர். 

நேற்று இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 50 வீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைப் பெற முடியவில்லை. 

இதன் காரணமாக உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளால் மேற்படி கலந்துரையாடல்கள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டன. 

அதன்படி, நேற்று இரவு மற்றுமொரு கலந்துரையாடல் நடைபெற்றது. 

இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சித் தலைவருடன் நாளை கலந்துரையாடல் உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளனர். நேற்று இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 50 வீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைப் பெற முடியவில்லை. இதன் காரணமாக உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளால் மேற்படி கலந்துரையாடல்கள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, நேற்று இரவு மற்றுமொரு கலந்துரையாடல் நடைபெற்றது. இருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement