• Jan 16 2026

“பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டம்” வரைவு தொடர்பான கருத்தமர்வு

Chithra / Jan 14th 2026, 8:43 pm
image


“பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டம்” வரைவு தொடர்பான கருத்தமர்வு இன்று  காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, கிளிநொச்சி தமிழ்ச்சங்கம் மண்டபத்தில் நடைபெற்றது சிறப்பாக நடைபெற்றது.

இக்கருத்தமர்வில் உள்ளூராட்சி மன்றங்களின்  மீனவ சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் குழுக்களின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

கருத்தமர்வின் போது, தற்போது நடைமுறையில் உள்ள PTA ,ATA  சட்டம் மற்றும் வரைவு நிலையில் உள்ள PSTA சட்டத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பாக வளவாளர், மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கமளித்தார். 

இதனைத் தொடர்ந்து, கலந்து கொண்ட பிரதிநிதிகள் இடையே கூட்டுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

PSTA வரைவு சட்டம் தொடர்பான எமது கருத்துகள் மற்றும் பரிந்துரைகள்  கலந்துரையாடலின் போது, PSTA வரைவு சட்டத்தில் காணப்படும் பல்வேறு விதிகள் சர்வதேச மனித உரிமை மற்றும் சர்வதேச நியம சட்டங்களுக்கு முழுமையாக ஒத்துப்போகாத நிலை, மேலும் “தேசிய பாதுகாப்பு” என்ற பெயரில் சிவில் சமூக அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள்,  அரசு எளிதாக அடக்குவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளமை போன்ற முக்கிய விடயங்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஒரு கூட்டு சமர்ப்பணம் முன்வைக்கப்பட உள்ளதையும் இந்த கருத்தமர்வின் போது பகிர்ந்து கொள்ளப்பட்டது



“பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டம்” வரைவு தொடர்பான கருத்தமர்வு “பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டம்” வரைவு தொடர்பான கருத்தமர்வு இன்று  காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, கிளிநொச்சி தமிழ்ச்சங்கம் மண்டபத்தில் நடைபெற்றது சிறப்பாக நடைபெற்றது.இக்கருத்தமர்வில் உள்ளூராட்சி மன்றங்களின்  மீனவ சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் குழுக்களின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.கருத்தமர்வின் போது, தற்போது நடைமுறையில் உள்ள PTA ,ATA  சட்டம் மற்றும் வரைவு நிலையில் உள்ள PSTA சட்டத்தில் அடங்கியுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பாக வளவாளர், மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து, கலந்து கொண்ட பிரதிநிதிகள் இடையே கூட்டுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.மேலும், எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.PSTA வரைவு சட்டம் தொடர்பான எமது கருத்துகள் மற்றும் பரிந்துரைகள்  கலந்துரையாடலின் போது, PSTA வரைவு சட்டத்தில் காணப்படும் பல்வேறு விதிகள் சர்வதேச மனித உரிமை மற்றும் சர்வதேச நியம சட்டங்களுக்கு முழுமையாக ஒத்துப்போகாத நிலை, மேலும் “தேசிய பாதுகாப்பு” என்ற பெயரில் சிவில் சமூக அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள்,  அரசு எளிதாக அடக்குவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளமை போன்ற முக்கிய விடயங்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஒரு கூட்டு சமர்ப்பணம் முன்வைக்கப்பட உள்ளதையும் இந்த கருத்தமர்வின் போது பகிர்ந்து கொள்ளப்பட்டது

Advertisement

Advertisement

Advertisement