கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்து வினைத்திறனாக செயற்பட வைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் எஸ்-முரளீதரன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், மாவட்ட மேலதிக அரச அதிபர் காணி நளாயினி இன்பராஜ்,
வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத்தலைவர் ஆர். உமாகரன், பிரதேச செயலாளர், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரைச்சி பிரதேச செயலாளர், வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் கரைச்சி பிரதேச சபையிடம் கையளித்து வினைத்திறனாக முன்னெடுப்பது தொடர்பாகவும் குறித்த விடயத்தை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சமர்ப்பிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல் கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்து வினைத்திறனாக செயற்பட வைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் எஸ்-முரளீதரன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், மாவட்ட மேலதிக அரச அதிபர் காணி நளாயினி இன்பராஜ்,வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத்தலைவர் ஆர். உமாகரன், பிரதேச செயலாளர், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரைச்சி பிரதேச செயலாளர், வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.எதிர்காலத்தில் கரைச்சி பிரதேச சபையிடம் கையளித்து வினைத்திறனாக முன்னெடுப்பது தொடர்பாகவும் குறித்த விடயத்தை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சமர்ப்பிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.