• May 24 2026

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உறுதி

Chithra / Oct 19th 2025, 10:00 am
image

 

இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

3 நாள் பயணமாக இந்தியா சென்றிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, டெல்லியில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும், இந்திய கடற்றொழிலாளர்களின் அடித்தள இழுவை மீன்பிடிப்பு முறை மிகவும் கவலையளிப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், இந்தப் பிரச்சினைக்கு இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காண உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உறுதி  இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 3 நாள் பயணமாக இந்தியா சென்றிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, டெல்லியில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும், இந்திய கடற்றொழிலாளர்களின் அடித்தள இழுவை மீன்பிடிப்பு முறை மிகவும் கவலையளிப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இந்தப் பிரச்சினைக்கு இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காண உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement