புத்தளம் மாவட்டத்தின் தங்கொட்டுவ, கோனவில பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்துப் பகுதியில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த பெண் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் தங்கொட்டுவ பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கழுத்தில் ஆழமான வெட்டுக்காயங்கள் புத்தளத்தில் அரங்கேறிய கொடூரம் புத்தளம் மாவட்டத்தின் தங்கொட்டுவ, கோனவில பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட பெண்ணின் கழுத்துப் பகுதியில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், குறித்த பெண் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மேலும், இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் தங்கொட்டுவ பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.