• Oct 15 2026

இலங்கையில் வரி செலுத்துவோருக்கு புதிய அறிவிப்பு – இறுதித் திகதி எப்போது?

Chithra / Oct 15th 2026, 12:34 pm
image


வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள நபர்கள், 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.


இது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.


குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் எனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


அத்துடன், வரி செலுத்துவோரின் வசதிக்காக 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை இணையவழியிலும் சமர்ப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது மேலதிக விளக்கங்கள் தேவைப்படுவோர், 1944 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.


மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் வரி செலுத்துவோருக்கு புதிய அறிவிப்பு – இறுதித் திகதி எப்போது வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள நபர்கள், 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும் எனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன், வரி செலுத்துவோரின் வசதிக்காக 2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை இணையவழியிலும் சமர்ப்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது மேலதிக விளக்கங்கள் தேவைப்படுவோர், 1944 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement