• Mar 15 2026

டிட்வா புயலின் கோரத்தாண்டவம்; இதுவரை 159 பேர் பலி

Aathira / Nov 30th 2025, 9:29 am
image

நாட்டில் நிலவிய அதிதீவிரமான வானிலை காரணமாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களிலேயே அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, குறித்த 2 மாவட்டங்களிலும், தலா 52 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

மேலும், மாத்தளை மாவட்டத்தில் 18 பேரும், கேகாலை மாவட்டத்தில் 09 பேரும், 

அம்பாறை மாவட்டத்தில் 8 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 7 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். 

இதுவரையில், அனர்த்தங்களால் மொத்தமாக 159 பேர் உயிரிழந்துள்ளனர். .

 203 பேர் காணாமல் போயுள்ளனர். 

அத்துடன், 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 503 குடும்பங்களைச் சேர்ந்த 8 இலட்சத்து 33, 985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

919 தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் 34,198 குடும்பங்கள் பாதுகாப்பாக தங்கியுள்ளனர்.

டிட்வா புயல் இப்போது இலங்கையை விட்டு சென்ற நிலையில் மலையக பகுதியில் நிலைமை சீராகத் துவங்கியுள்ளது.

இரண்டு நாட்களில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது

டிட்வா புயலின் கோரத்தாண்டவம்; இதுவரை 159 பேர் பலி நாட்டில் நிலவிய அதிதீவிரமான வானிலை காரணமாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களிலேயே அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர்.அதன்படி, குறித்த 2 மாவட்டங்களிலும், தலா 52 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், மாத்தளை மாவட்டத்தில் 18 பேரும், கேகாலை மாவட்டத்தில் 09 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 8 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 7 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், அனர்த்தங்களால் மொத்தமாக 159 பேர் உயிரிழந்துள்ளனர். . 203 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன், 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 இலட்சத்து 34 ஆயிரத்து 503 குடும்பங்களைச் சேர்ந்த 8 இலட்சத்து 33, 985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 919 தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் 34,198 குடும்பங்கள் பாதுகாப்பாக தங்கியுள்ளனர்.டிட்வா புயல் இப்போது இலங்கையை விட்டு சென்ற நிலையில் மலையக பகுதியில் நிலைமை சீராகத் துவங்கியுள்ளது.இரண்டு நாட்களில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் மீண்டும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement