ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (01) பிணை வழங்கியுள்ளது.
அதன்படி சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேநேரம், சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்த நீதிமன்றம், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
பின்னர் நீதிமன்றம் இந்த வழக்கை 2026 ஜனவரி 9, அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.
2015 ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ரூ. 2.5 கோடி பெறுமதியுள்ள சோள விதைகளை, தமது ஆதரவாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் கீழ் இந்த கைது மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (01) பிணை வழங்கியுள்ளது.அதன்படி சந்தேக நபரை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.அதேநேரம், சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்த நீதிமன்றம், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.பின்னர் நீதிமன்றம் இந்த வழக்கை 2026 ஜனவரி 9, அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.2015 ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ரூ. 2.5 கோடி பெறுமதியுள்ள சோள விதைகளை, தமது ஆதரவாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் கீழ் இந்த கைது மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.