• May 26 2025

ஹெலிகொப்டர் விபத்து குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Chithra / May 12th 2025, 12:39 pm
image

 

இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் கடந்த 09ஆம் திகதி மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில் முழுமையாக விசாரித்து விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு தெஹியத்தகண்டிய நீதிமன்ற நீதிவான் பொலிஸார் மற்றும் விமானப்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஹெலிகொப்டர் விபத்து தொடர்பிலான அறிக்கைகளை பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பிக்கும் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் சிதைந்த பாகங்கள் மேலதிக ஆய்விற்காக கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் வான்வழி துப்பாக்கி வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ படை வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹெலிகொப்டர் விபத்து குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு  இலங்கை விமான படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் கடந்த 09ஆம் திகதி மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில் முழுமையாக விசாரித்து விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு தெஹியத்தகண்டிய நீதிமன்ற நீதிவான் பொலிஸார் மற்றும் விமானப்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.ஹெலிகொப்டர் விபத்து தொடர்பிலான அறிக்கைகளை பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பிக்கும் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் சிதைந்த பாகங்கள் மேலதிக ஆய்விற்காக கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் வான்வழி துப்பாக்கி வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ படை வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now