செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி மூன்று மாணவிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் மாணவன் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நிக்கவெரட்டியவில் உள்ள ஒரு பிரபல பாடசாலையின் அதிபர் மற்றும் மாணவன் ஆகியோரே இவ்வாறு கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
14 மற்றும் 15 வயது மாணவிகளின் புகைப்படங்களை நிர்வாண படங்களாக AI கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கிய குற்றச்சாட்டில் குறித்த இருவரும் நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த மாணவன் மாணவிகளின் புகைப்படங்களை AI கருவிகளைப் பயன்படுத்தி நிர்வாண படங்களாக மாற்றியுள்ளார். பின்னர் அவை மாணவியின் தொலைபேசியில் சேமிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் அந்த தொலைபேசி அதிபரின் வசம் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் அதிபர் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்காமல் அதனை ஒரு மாதம் வைத்திருந்துள்ளார்.
அதன்பின்னர் பாடசாலையின் முன்னாள் மாணவர் சங்கம் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விடயம் வெளிவந்தது.
அதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களான அதிபரும் ஆசிரியரும் நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.
இருவரையும் நிக்கவெரட்டிய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்திய போது, தலா 100,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள சரீரப் பிணையிலும் அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவர்களின் பிணையாளர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகநபர்கள் ஒக்டோபர் 23 ஆம் திகதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலதிக விசாரணைகளை பொலிஸ்பிரிவின் சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.
AI மூலம் மாணவிகளின் நிர்வாணப் புகைப்படங்கள்; கைதான அதிபர், மாணவனுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி மூன்று மாணவிகளின் நிர்வாண படங்களை உருவாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் மாணவன் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நிக்கவெரட்டியவில் உள்ள ஒரு பிரபல பாடசாலையின் அதிபர் மற்றும் மாணவன் ஆகியோரே இவ்வாறு கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 14 மற்றும் 15 வயது மாணவிகளின் புகைப்படங்களை நிர்வாண படங்களாக AI கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கிய குற்றச்சாட்டில் குறித்த இருவரும் நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டனர். குறித்த மாணவன் மாணவிகளின் புகைப்படங்களை AI கருவிகளைப் பயன்படுத்தி நிர்வாண படங்களாக மாற்றியுள்ளார். பின்னர் அவை மாணவியின் தொலைபேசியில் சேமிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அந்த தொலைபேசி அதிபரின் வசம் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் அதிபர் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்காமல் அதனை ஒரு மாதம் வைத்திருந்துள்ளார். அதன்பின்னர் பாடசாலையின் முன்னாள் மாணவர் சங்கம் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விடயம் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களான அதிபரும் ஆசிரியரும் நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டனர். இருவரையும் நிக்கவெரட்டிய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்திய போது, தலா 100,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள சரீரப் பிணையிலும் அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களின் பிணையாளர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகநபர்கள் ஒக்டோபர் 23 ஆம் திகதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலதிக விசாரணைகளை பொலிஸ்பிரிவின் சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.