• Dec 28 2025

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் செயலமர்வு!

shanuja / Dec 27th 2025, 11:51 am
image

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு இன்று (27) கல்முனை பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.


இச்செயலமர்வு கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி தலமையில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டது.


கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பொறுப்பதிகாரி  எம் றபீக் வழிகாட்டலில் இவ் நிகழ்வு இடம்பெற்றதுடன்  இவ் விழிப்புணர்வு செயலமர்வின் பிரதான வளவாளராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரி எம்.எச்.எம் றிபாஜ் அத்துடன் புலனாய்வு அதிகாரிகளான இஷட்.எம் ஸாஜீத் மற்றும் ஏ.பீ.எம் றிப்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதன் போது நுகர்வோர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள்,பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக விரிவுரை விளக்க காட்சி ஊடாக வழங்கப்பட்டது.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் செயலமர்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு இன்று (27) கல்முனை பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.இச்செயலமர்வு கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொறுப்பதிகாரி  லசந்த களுவாராய்ச்சி தலமையில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டது.கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பொறுப்பதிகாரி  எம் றபீக் வழிகாட்டலில் இவ் நிகழ்வு இடம்பெற்றதுடன்  இவ் விழிப்புணர்வு செயலமர்வின் பிரதான வளவாளராக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரி எம்.எச்.எம் றிபாஜ் அத்துடன் புலனாய்வு அதிகாரிகளான இஷட்.எம் ஸாஜீத் மற்றும் ஏ.பீ.எம் றிப்சாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன் போது நுகர்வோர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள்,பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக விரிவுரை விளக்க காட்சி ஊடாக வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement