முல்லைத்தீவு - முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கதவடைப்பு நடத்துவது பயனற்ற செயல் என பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
அந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்,
நாங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம், ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடுவது அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய மாகாணங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் அதற்காக அங்கே எவரும் ஹர்த்தாலில் ஈடுபடவில்லை.
நாங்கள் இந்த சம்பவத்தினை இன மத அடிப்படையில் பார்க்ககூடாது, குற்றங்கள் இடம்பெற்றால் பொலிஸார் அதற்கு காரணமானவர்களிற்கு எதிராக அவர்களின் பின்னணியை கருத்தில் கொள்ளாமல் நடவடிக்கை எடுப்பார்கள்.
கடந்த சில மாதங்களாக நாங்கள் இதனையே செய்கின்றோம் என்பதை நிரூபித்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடக்கு - கிழக்கில் கதவடைப்பு நடத்துவது பயனற்ற செயல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு முல்லைத்தீவு - முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கதவடைப்பு நடத்துவது பயனற்ற செயல் என பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர், நாங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம், ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடுவது அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.ஏனைய மாகாணங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் அதற்காக அங்கே எவரும் ஹர்த்தாலில் ஈடுபடவில்லை.நாங்கள் இந்த சம்பவத்தினை இன மத அடிப்படையில் பார்க்ககூடாது, குற்றங்கள் இடம்பெற்றால் பொலிஸார் அதற்கு காரணமானவர்களிற்கு எதிராக அவர்களின் பின்னணியை கருத்தில் கொள்ளாமல் நடவடிக்கை எடுப்பார்கள்.கடந்த சில மாதங்களாக நாங்கள் இதனையே செய்கின்றோம் என்பதை நிரூபித்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.