• May 08 2025

பிற்பகல் ஒரு மணிக்குப்பின் நாட்டின் வானிலையில் மாற்றம்

Chithra / May 8th 2025, 8:19 am
image

 

நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

நாட்டின் ஏனைய சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேல், தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டம் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

பிற்பகல் ஒரு மணிக்குப்பின் நாட்டின் வானிலையில் மாற்றம்  நாட்டின் சில இடங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் ஏனைய சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டம் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement