நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏனைய இடங்களில் வறட்சியான காலநிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வானிலை ஆய்வு அறிக்கையில் இவ்வாறு எதிர்வுகூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான காலநிலை நிலவும்.
இதேவேளை கொழும்பிலிருந்து காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடலோரப் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காற்றின் திசை வடகிழக்கு திசையாகவோ அல்லது திசை மாறுபடுவதாகவோ இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 20-30 கி.மீ. ஆக இருக்கும்.
புத்தளத்திலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 40 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
புத்தளத்திலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் சில நேரங்களில் மிதமான சீற்றம் காணப்படும். தீவைச் சுற்றியுள்ள மற்ற கடல் பகுதிகளில் லேசான சீற்றம் இருக்கும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் எதிர்பார்க்கப்படலாம். எனவே மழை மற்றும் வறண்ட வானிலையால் ஏற்படும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கில் இன்று பிற்பகல் மழைக்கு வாய்ப்பு; ஏனைய இடங்களில் வறட்சியான காலநிலை நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏனைய இடங்களில் வறட்சியான காலநிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வானிலை ஆய்வு அறிக்கையில் இவ்வாறு எதிர்வுகூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான காலநிலை நிலவும்.இதேவேளை கொழும்பிலிருந்து காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடலோரப் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.காற்றின் திசை வடகிழக்கு திசையாகவோ அல்லது திசை மாறுபடுவதாகவோ இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 20-30 கி.மீ. ஆக இருக்கும். புத்தளத்திலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 40 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.புத்தளத்திலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் சில நேரங்களில் மிதமான சீற்றம் காணப்படும். தீவைச் சுற்றியுள்ள மற்ற கடல் பகுதிகளில் லேசான சீற்றம் இருக்கும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல் எதிர்பார்க்கப்படலாம். எனவே மழை மற்றும் வறண்ட வானிலையால் ஏற்படும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.