நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கடந்த சில நாளாக அதிகரித்து வரும் காற்றை அடுத்து இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனவே மழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கடந்த சில நாளாக அதிகரித்து வரும் காற்றை அடுத்து இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.எனவே மழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.