இலங்கையிலுள்ள பிரதான தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை பிரதான மேதினக் கூட்டத்தையோ அல்லது பேரணியையோ நடத்தவில்லை.
கொட்டகலையிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
மேலும், கொட்டகலை முத்து விநாயகர் கோவிலில் பூஜை வழிபாடு இடம்பெற்றது.
இதில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்றார்.
மேலும், மே தினத்தை முன்னிட்டு தோட்ட மற்றும் நகரவாரியாக சிறு கூட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இ.தொ.கா பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.
மே தினத்துக்காக செலவிடப்படும் பணம், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காக ஒதுக்கப்படும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேதினக் கூட்டத்தையோ, பேரணியையோ நடத்தாத இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இலங்கையிலுள்ள பிரதான தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை பிரதான மேதினக் கூட்டத்தையோ அல்லது பேரணியையோ நடத்தவில்லை.கொட்டகலையிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. மேலும், கொட்டகலை முத்து விநாயகர் கோவிலில் பூஜை வழிபாடு இடம்பெற்றது. இதில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்றார்.மேலும், மே தினத்தை முன்னிட்டு தோட்ட மற்றும் நகரவாரியாக சிறு கூட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இ.தொ.கா பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.மே தினத்துக்காக செலவிடப்படும் பணம், தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்காக ஒதுக்கப்படும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.