கேரளாவுக்கு அருகே அரபிக் கடலில் எண்ணெய் மற்றும் ஆபத்தான பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையினால், இலங்கையும் பாதிக்கப்படக்கூடும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இருப்பினும், சம்பவத்திற்குப் பிறகு கப்பலிலிருந்த பொருட்கள் இலங்கையில் கரை ஒதுங்கியதாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என அந்த அதிகாரசபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார்.
லைபீரிய கொடியுடன் கூடிய குறித்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், அதன் பின்னர் அதன் பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
எனினும், கப்பலிலிருந்த 640 கொள்கலன்களில் சுமார் 30 கொள்கலன்கள் இந்தியக் கடற்பரப்பில் கரையொதுங்கியதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கப்பலிலிருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டதால், எண்ணெய் படலம் கேரள கடற்கரையில் எந்த இடத்தையும் அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்குத் தயாராக இருப்பதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார்.
கேரளா அருகே கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; இலங்கையை பாதிக்குமா வெளியான தகவல் கேரளாவுக்கு அருகே அரபிக் கடலில் எண்ணெய் மற்றும் ஆபத்தான பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையினால், இலங்கையும் பாதிக்கப்படக்கூடும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இருப்பினும், சம்பவத்திற்குப் பிறகு கப்பலிலிருந்த பொருட்கள் இலங்கையில் கரை ஒதுங்கியதாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என அந்த அதிகாரசபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார். லைபீரிய கொடியுடன் கூடிய குறித்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், அதன் பின்னர் அதன் பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். எனினும், கப்பலிலிருந்த 640 கொள்கலன்களில் சுமார் 30 கொள்கலன்கள் இந்தியக் கடற்பரப்பில் கரையொதுங்கியதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கப்பலிலிருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டதால், எண்ணெய் படலம் கேரள கடற்கரையில் எந்த இடத்தையும் அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள நேர்ந்தால், அதற்குத் தயாராக இருப்பதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார்.