கண்டியின் பல பகுதிகளுக்கு 36 மணி நேர நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி நகர சபையின் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.
கண்டி குட்ஷெட் பேருந்து நிறுத்தத்தின் கட்டுமானப் பணிகளின் போது, நீர் விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று பிற்பகல் 2.00 மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை 36 மணி நேர நீர் விநியோகம் தடைப்பட உள்ளது.
அந்தவகையில், கண்டி மாநகர சபையின் மாநகர ஆணையாளர் கூறுகையில்,
பேராதனை வீதி, வில்லியம் கோபல்லாவ மாவத்தை, நீதிமன்ற வளாகத்திற்கு அருகில், மாநகர சபை சந்தி, அஸ்கிரிய, வேவ ராவ, ராஜா பிஹில்ல மாவத்தை, பூவெலிகட, தென்னகும்புர, குருதெனிய, அம்பிட்டிய மற்றும் கண்டி நகர மையம் வரையிலான அனைத்து பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.
சேதமடைந்த நீர் விநியோக முறையை சரிசெய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதால், சேமிக்கப்பட்ட நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கண்டி மாநகர சபை கேட்டுக்கொள்கிறது.
நாட்டின் முக்கிய பகுதிகளில் 36 மணி நேர நீர்வெட்டு வெளியான அறிவிப்பு கண்டியின் பல பகுதிகளுக்கு 36 மணி நேர நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி நகர சபையின் மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.கண்டி குட்ஷெட் பேருந்து நிறுத்தத்தின் கட்டுமானப் பணிகளின் போது, நீர் விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.இதன்படி, இன்று பிற்பகல் 2.00 மணி முதல் 30 ஆம் திகதி அதிகாலை 2.00 மணி வரை 36 மணி நேர நீர் விநியோகம் தடைப்பட உள்ளது.அந்தவகையில், கண்டி மாநகர சபையின் மாநகர ஆணையாளர் கூறுகையில், பேராதனை வீதி, வில்லியம் கோபல்லாவ மாவத்தை, நீதிமன்ற வளாகத்திற்கு அருகில், மாநகர சபை சந்தி, அஸ்கிரிய, வேவ ராவ, ராஜா பிஹில்ல மாவத்தை, பூவெலிகட, தென்னகும்புர, குருதெனிய, அம்பிட்டிய மற்றும் கண்டி நகர மையம் வரையிலான அனைத்து பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.சேதமடைந்த நீர் விநியோக முறையை சரிசெய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதால், சேமிக்கப்பட்ட நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கண்டி மாநகர சபை கேட்டுக்கொள்கிறது.