இலங்கை போக்குவரத்து சபைக்கும் (SLTB) தனியார் போக்குவரத்துத் துறைக்கும் அட்டை கட்டண முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
மக்களின் ஆணை மற்றும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், போக்குவரத்துத் துறையை புதிய நிலைக்குக் கொண்டு செல்ல ஒவ்வொரு துறையும் நெறிப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் கூறினார்.
அத்துடன், பணப்புழக்கம் காரணமாக சட்டவிரோத பரிவர்த்தனைகள் மற்றும் ஊழல்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், போக்குவரத்துத் துறையில் அட்டை கட்டண முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் பி.ஏ. சந்திரபாலவின் கடமைகளை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இதேவேளை, தற்போது பல துறைகளின் கீழ் இயங்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை நெறிப்படுத்த ஆணையத்தின் மூலம் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் பி.ஏ. சந்திரபால குறிப்பிட்டார்.
பேருந்து சேவையில் விரைவில் அட்டை கட்டண முறை அறிமுகம் இலங்கை போக்குவரத்து சபைக்கும் (SLTB) தனியார் போக்குவரத்துத் துறைக்கும் அட்டை கட்டண முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.மக்களின் ஆணை மற்றும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், போக்குவரத்துத் துறையை புதிய நிலைக்குக் கொண்டு செல்ல ஒவ்வொரு துறையும் நெறிப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் கூறினார்.அத்துடன், பணப்புழக்கம் காரணமாக சட்டவிரோத பரிவர்த்தனைகள் மற்றும் ஊழல்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், போக்குவரத்துத் துறையில் அட்டை கட்டண முறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.தேசிய போக்குவரத்து ஆணையத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் பி.ஏ. சந்திரபாலவின் கடமைகளை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.இதேவேளை, தற்போது பல துறைகளின் கீழ் இயங்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை நெறிப்படுத்த ஆணையத்தின் மூலம் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் பி.ஏ. சந்திரபால குறிப்பிட்டார்.