• Dec 28 2025

யாழில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!

shanuja / Dec 27th 2025, 8:13 am
image


இன்று காலை, யாழில் கிணறு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டது. உடுவில் - மல்வம் பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் ரெஜித்டிலாஸ் (வயது 40) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


இது குறித்து மேலும் தெரியவருகையில்,


குறித்த நபர் நேற்றிரவு மதுபோதையில் சென்று மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்ன வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அவர் இரவு வீட்டுக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


பின்னர் அவரை இன்று காலை தேடியவேளை வீட்டின் அருகேயுள்ள காணி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


அவர் குறித்த கிணற்று கட்டு மீது அமர்ந்திருந்து இதற்கு முன்னரும் மதுபானம் அருந்துவது வழமை என்றும், அவ்வாறு நேற்றிரவு போதையில் இருந்து மதுபானம் அருந்தியவேளை கிணற்றில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.


சுன்னாகம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


யாழில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு இன்று காலை, யாழில் கிணறு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டது. உடுவில் - மல்வம் பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் ரெஜித்டிலாஸ் (வயது 40) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் நேற்றிரவு மதுபோதையில் சென்று மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்ன வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அவர் இரவு வீட்டுக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.பின்னர் அவரை இன்று காலை தேடியவேளை வீட்டின் அருகேயுள்ள காணி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவர் குறித்த கிணற்று கட்டு மீது அமர்ந்திருந்து இதற்கு முன்னரும் மதுபானம் அருந்துவது வழமை என்றும், அவ்வாறு நேற்றிரவு போதையில் இருந்து மதுபானம் அருந்தியவேளை கிணற்றில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.சுன்னாகம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement