யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதீகோவிலடி பகுதியில் வீசிய புயல்காற்றின் தாக்கத்தால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீன்பிடிப் படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு போகமுடியாத நிலையில் ஆழ் நடமாட்டம் அற்றதாக கடற்பரப்பு காணப்பட்டது.
இதேவேளை புயலுக்கு பின்னர் படகுகள் சேதமடைந்ததை அவதானிக்க முடிந்தது.
காற்றின் வேகம் அதிகரித்ததும் கடல் பரப்பில் ஏற்பட்ட வேகத்தால், படகுகள் பாறைகளில் மோதி சேதமடைந்துள்ளதுடன், பலரது வலைகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்களும் கடலிற்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
புயலால் ஏற்பட்ட சேதத்திற்கு பின் மீனவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று படகுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே காணாமல் போன வலைகள் மற்றும் உபகரணங்களைத் தேடும் பணியும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
திடீரென ஏற்பட்ட இந்த இயற்கைக் அனர்த்ததால் அப்பகுதி மீனவர்கள் பெரும் பொருளாதார இழப்பிற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடுமையான காற்றினால் வல்வெட்டித்துறை ஆதீகோவிலடியில் படகுகள் சேதம். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதீகோவிலடி பகுதியில் வீசிய புயல்காற்றின் தாக்கத்தால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீன்பிடிப் படகுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு போகமுடியாத நிலையில் ஆழ் நடமாட்டம் அற்றதாக கடற்பரப்பு காணப்பட்டது.இதேவேளை புயலுக்கு பின்னர் படகுகள் சேதமடைந்ததை அவதானிக்க முடிந்தது.காற்றின் வேகம் அதிகரித்ததும் கடல் பரப்பில் ஏற்பட்ட வேகத்தால், படகுகள் பாறைகளில் மோதி சேதமடைந்துள்ளதுடன், பலரது வலைகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்களும் கடலிற்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.புயலால் ஏற்பட்ட சேதத்திற்கு பின் மீனவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று படகுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே காணாமல் போன வலைகள் மற்றும் உபகரணங்களைத் தேடும் பணியும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.திடீரென ஏற்பட்ட இந்த இயற்கைக் அனர்த்ததால் அப்பகுதி மீனவர்கள் பெரும் பொருளாதார இழப்பிற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.