நைஜீரியாவின் சோகோட்டோ (Sokoto ) மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள பிரபலமான சந்தைக்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தைக்குச் செல்வதற்காக 50 பேருடன் பயணித்த குறித்த படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
பயணிகள் 50 பேரில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், மீதமிருந்த 40 பேரும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த வாரம் நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் 100 பேர் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தொடர்ச்சியாக படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகுவது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் கவிழ்ந்த படகு; 40 பேர் மாயம்- மீட்புப் பணிகள் தீவிரம் நைஜீரியாவின் சோகோட்டோ (Sokoto ) மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியிலுள்ள பிரபலமான சந்தைக்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தைக்குச் செல்வதற்காக 50 பேருடன் பயணித்த குறித்த படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. பயணிகள் 50 பேரில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், மீதமிருந்த 40 பேரும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த வாரம் நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் 100 பேர் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொடர்ச்சியாக படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகுவது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.