கொழும்பு - புறக்கோட்டையில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் போது அங்கீகரிக்கப்படாத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை கைப்பற்றியுள்ளது.
பல விற்பனை நிலையங்களில் அங்கீகரிக்கப்படாத வெண்மையாக்கும் முகப்பூச்சுகள் மற்றும் பதிவு செய்யப்படாத அழகுசாதனப் பொருட்கள் சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது நுகர்வோருக்கு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடியவை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனைகளில் முறையான சுற்றுத்தாள்கள், காலாவதி திகதிகள் அல்லது மூலப்பொருள் விபரங்கள் இல்லாத இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான சொக்லேட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோரைப் பாதுகாக்கவும், உண்மையான மற்றும் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமே சந்தையில் கிடைப்பதை உறுதி செய்யவும் நாடு தழுவிய சோதனைகளை தொடரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், சந்தேகத்துக்கிடமான அல்லது பாதுகாப்பற்ற தயாரிப்புகள் குறித்து 1977 என்ற துரித எண்ணுக்கு முறைப்பாடளிக்குமாறு அந்த அதிகாரசபை நுகர்வோரை கோரியுள்ளது.
இலங்கையர்களுக்கு ஆபத்தாக மாறும் அழகுசாதன பொருட்கள், சொக்லேட்டுகள் கொழும்பு - புறக்கோட்டையில் நடத்தப்பட்ட தொடர் சோதனைகளின் போது அங்கீகரிக்கப்படாத அழகுசாதனப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை கைப்பற்றியுள்ளது.பல விற்பனை நிலையங்களில் அங்கீகரிக்கப்படாத வெண்மையாக்கும் முகப்பூச்சுகள் மற்றும் பதிவு செய்யப்படாத அழகுசாதனப் பொருட்கள் சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது நுகர்வோருக்கு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தக்கூடியவை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றன.இந்த சோதனைகளில் முறையான சுற்றுத்தாள்கள், காலாவதி திகதிகள் அல்லது மூலப்பொருள் விபரங்கள் இல்லாத இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான சொக்லேட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நுகர்வோரைப் பாதுகாக்கவும், உண்மையான மற்றும் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மட்டுமே சந்தையில் கிடைப்பதை உறுதி செய்யவும் நாடு தழுவிய சோதனைகளை தொடரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.இந்தநிலையில், சந்தேகத்துக்கிடமான அல்லது பாதுகாப்பற்ற தயாரிப்புகள் குறித்து 1977 என்ற துரித எண்ணுக்கு முறைப்பாடளிக்குமாறு அந்த அதிகாரசபை நுகர்வோரை கோரியுள்ளது.