மன்னார் பேருந்து நிலையத்தில் சக தனியார் பேருந்து சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துநருக்கு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற பணி தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த 08.04.2026 அன்று பேசாலை மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த மற்றொரு தனியார் பேருந்தின் சாரதியுடன் குறித்த தனியார் பேருந்து நடத்துநர் முரண்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த நடத்துநரின் ஒழுங்கீனமான செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சர்ச்சைக்குரிய நடத்துநருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காலவரையற்ற பணித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில், அவர் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினூடாக வழி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு பேருந்திலும் பணியாற்றுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பேருந்து நிலையத்தில் சக பேருந்து சாரதியுடன் முரண்பட்ட நடத்துநருக்கு காலவரையற்ற பணி தடை மன்னார் பேருந்து நிலையத்தில் சக தனியார் பேருந்து சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துநருக்கு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற பணி தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார். கடந்த 08.04.2026 அன்று பேசாலை மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த மற்றொரு தனியார் பேருந்தின் சாரதியுடன் குறித்த தனியார் பேருந்து நடத்துநர் முரண்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த நடத்துநரின் ஒழுங்கீனமான செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனடிப்படையில், சர்ச்சைக்குரிய நடத்துநருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காலவரையற்ற பணித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில், அவர் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினூடாக வழி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு பேருந்திலும் பணியாற்றுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.