தேசிய மக்கள் சக்தியானது இன்று தேசிய சலவை சக்தியாக மாறியுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகருப் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்தின் பெயரைக் கூட தேசிய சலவை சக்தி என்ற ஒரு தொனிப்பொருளிலே நாங்கள் மாற்ற வேண்டியவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம். ஏன் இதை இப்படிச் சொல்லுகின்றேன் என்றால் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் சொன்ன விடயங்களை நாங்கள் யோசிக்க வேண்டும்.
குறிப்பாக நாங்கள் அந்த நேரத்திலே நல்லவர்களை உருவாக்குவதற்கான ஒரு கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் நல்ல அரசியல் தலைமைத்துவங்களை உருவாக்க வேண்டும் என்று சொன்னவர்கள் இன்று தேர்தல் முடிந்ததற்குப் பின்னர் இன்று சென்ற காலங்களிலேயே சவால் மிக்க பிழையான சில நடத்தைகளை நடாத்திய அந்த அரசியல்வாதிகளைக் கூட இணைத்துக்கொண்டு இப்பொழுது அவர்கள் ஆட்சியமைக்கின்றார்கள் என்றால் கெட்டவர்கள் எல்லாம் சலவை செய்து ஒரு தூயமான நிலையை அடைவதென்றால் உங்கள் கட்சியிலே பயணிக்கின்ற அந்த நிலைப்பாட்டைத் தான் கூற முற்படுகின்றீர்கள்.
அந்த அடிப்படையில் தான் இனி நீங்கள் தேசிய சலவை சக்தி என்று சொன்னால் தான் அது நியாயமாக இருக்கும் என்பதைக் கூறிக்கொள்கின்றேன். சென்ற காலம் கள்ளர்களுடைய ஆட்சி என்றார்கள். இப்போது நல்லவர்களுடைய ஆட்சி என்று சொல்கின்றார்கள். இப்படிப் பார்க்கும் போது கள்ளர்களுடைய ஆட்சியிலே நாங்கள் 100 ரூபாய்க்கு உப்பு வாங்கியிருந்தால் இன்று இந்த நல்லவர்களுடைய ஆட்சியிலே 500 ரூபாய் செலவளிக்க வேண்டியிருக்கின்றது உப்பைப் பெறுவதற்காக .
ஆகையால் இன்று இந்த நிலைப்பாட்டிலே நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள் என்பதை நீங்கள் சிந்த்தித்திருக்க வேண்டும். ஏனென்றால் முன்னைய ஆட்சிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் பிரச்சினைகள் , டீசல் தட்டுப்பாடுகள் வருகின்ற பொழுது , பொருள்களின் விலை அதிகரிக்கின்ற பொழுது இந்த விலை அதிகரிப்பு தட்டுப்பாடுகளின் மூலமாக பல அமைச்சர்கள் உழைக்கின்றார்கள். அந்த அமைச்சர்களுக்கு சில மீதமான பணம் செல்லுகின்றது.
இதன் காரணமாகத் தான் நாடு பெரும்பாலும் பல கோடிக்கணக்கான வருமானத்தை இழக்கின்றது என்று சொல்லுகின்ற நீங்கள் இன்று உப்புத்தட்டுப்பாடு ஏற்படுகின்ற பொழுது இங்கு முன்னால் இருக்கின்ற எந்த அமைச்சருக்கு அந்த வீரம் செல்லுகின்றது. எவ்வளவு தொகை உங்களுக்கு கிடைக்கின்றது. எத்தனை கோடி ரூபாய் எங்களுடைய நாட்டு அரசாங்கத்துக்கு இதன் மூலமாக நஸ்டம் ஏற்பட்டிருக்கின்றது என்று கேட்கின்றோம்.
அதுமட்டுமன்றி திருகோணமலைப் பிரதேசத்தில் கருவாட்டு உற்பத்திகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தக் கருவாட்டு உற்பத்தியிலே இவர்கள் நாடு முழுவதும் அதை விற்பனை செய்கின்றவர்களாகவும் வெளிநாடுகளிற்கும் ஏற்றுமதி செய்கின்றவர்களாகவும் உள்ளார்கள். அவர்கள் 2000 ரூபாய்க்கு வாங்கிய அந்த உப்பு இன்று 10000 ரூபாயை விட கூடுதலாக சென்றுள்ளது.
ஆகையால் தயவுசெய்து மீண்டும் மீண்டும் ஒரு எதிர்க்கட்சியினுடைய செயல்களைப் போன்று செய்யாது ஒரு 159 பாராளுமன்ற உறுப்பினர்களை , அதிகாரங்களை வைத்திருக்கின்ற கட்சியாக நீங்கள் செயற்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும் எனவும் தெரிவித்தார்.
தேசிய சலவை சக்தியாக மாறியுள்ள அநுரவின் கட்சி: சபையில் இம்ரான் எம்.பி காட்டம். தேசிய மக்கள் சக்தியானது இன்று தேசிய சலவை சக்தியாக மாறியுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகருப் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தேசிய மக்கள் சக்தி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்தின் பெயரைக் கூட தேசிய சலவை சக்தி என்ற ஒரு தொனிப்பொருளிலே நாங்கள் மாற்ற வேண்டியவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம். ஏன் இதை இப்படிச் சொல்லுகின்றேன் என்றால் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் சொன்ன விடயங்களை நாங்கள் யோசிக்க வேண்டும்.குறிப்பாக நாங்கள் அந்த நேரத்திலே நல்லவர்களை உருவாக்குவதற்கான ஒரு கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் நல்ல அரசியல் தலைமைத்துவங்களை உருவாக்க வேண்டும் என்று சொன்னவர்கள் இன்று தேர்தல் முடிந்ததற்குப் பின்னர் இன்று சென்ற காலங்களிலேயே சவால் மிக்க பிழையான சில நடத்தைகளை நடாத்திய அந்த அரசியல்வாதிகளைக் கூட இணைத்துக்கொண்டு இப்பொழுது அவர்கள் ஆட்சியமைக்கின்றார்கள் என்றால் கெட்டவர்கள் எல்லாம் சலவை செய்து ஒரு தூயமான நிலையை அடைவதென்றால் உங்கள் கட்சியிலே பயணிக்கின்ற அந்த நிலைப்பாட்டைத் தான் கூற முற்படுகின்றீர்கள்.அந்த அடிப்படையில் தான் இனி நீங்கள் தேசிய சலவை சக்தி என்று சொன்னால் தான் அது நியாயமாக இருக்கும் என்பதைக் கூறிக்கொள்கின்றேன். சென்ற காலம் கள்ளர்களுடைய ஆட்சி என்றார்கள். இப்போது நல்லவர்களுடைய ஆட்சி என்று சொல்கின்றார்கள். இப்படிப் பார்க்கும் போது கள்ளர்களுடைய ஆட்சியிலே நாங்கள் 100 ரூபாய்க்கு உப்பு வாங்கியிருந்தால் இன்று இந்த நல்லவர்களுடைய ஆட்சியிலே 500 ரூபாய் செலவளிக்க வேண்டியிருக்கின்றது உப்பைப் பெறுவதற்காக .ஆகையால் இன்று இந்த நிலைப்பாட்டிலே நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள் என்பதை நீங்கள் சிந்த்தித்திருக்க வேண்டும். ஏனென்றால் முன்னைய ஆட்சிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் பிரச்சினைகள் , டீசல் தட்டுப்பாடுகள் வருகின்ற பொழுது , பொருள்களின் விலை அதிகரிக்கின்ற பொழுது இந்த விலை அதிகரிப்பு தட்டுப்பாடுகளின் மூலமாக பல அமைச்சர்கள் உழைக்கின்றார்கள். அந்த அமைச்சர்களுக்கு சில மீதமான பணம் செல்லுகின்றது. இதன் காரணமாகத் தான் நாடு பெரும்பாலும் பல கோடிக்கணக்கான வருமானத்தை இழக்கின்றது என்று சொல்லுகின்ற நீங்கள் இன்று உப்புத்தட்டுப்பாடு ஏற்படுகின்ற பொழுது இங்கு முன்னால் இருக்கின்ற எந்த அமைச்சருக்கு அந்த வீரம் செல்லுகின்றது. எவ்வளவு தொகை உங்களுக்கு கிடைக்கின்றது. எத்தனை கோடி ரூபாய் எங்களுடைய நாட்டு அரசாங்கத்துக்கு இதன் மூலமாக நஸ்டம் ஏற்பட்டிருக்கின்றது என்று கேட்கின்றோம். அதுமட்டுமன்றி திருகோணமலைப் பிரதேசத்தில் கருவாட்டு உற்பத்திகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தக் கருவாட்டு உற்பத்தியிலே இவர்கள் நாடு முழுவதும் அதை விற்பனை செய்கின்றவர்களாகவும் வெளிநாடுகளிற்கும் ஏற்றுமதி செய்கின்றவர்களாகவும் உள்ளார்கள். அவர்கள் 2000 ரூபாய்க்கு வாங்கிய அந்த உப்பு இன்று 10000 ரூபாயை விட கூடுதலாக சென்றுள்ளது.ஆகையால் தயவுசெய்து மீண்டும் மீண்டும் ஒரு எதிர்க்கட்சியினுடைய செயல்களைப் போன்று செய்யாது ஒரு 159 பாராளுமன்ற உறுப்பினர்களை , அதிகாரங்களை வைத்திருக்கின்ற கட்சியாக நீங்கள் செயற்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும் எனவும் தெரிவித்தார்.