• Aug 27 2025

'அநுர கோ ஹோம்' கொழும்பில் ஒன்றுதிரண்ட எதிர்க்கட்சிகள்; ஆதரவாளர்களால் கூச்சலிட்டு குழப்பம்

Chithra / Aug 26th 2025, 2:22 pm
image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம் தொடர்பில் தற்போது கொழும்பில் ஒன்று திரண்டுள்ள ரணில் ஆதரவாளர்களால் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

இதன்போது, “அநுர கோ ஹோம்”  என்ற கூச்சல்களோடு அங்கு ஒன்று திரண்டுள்ளவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினரும் கொழும்பில் ஒன்று திரண்டு எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கொழும்பு கோட்டை  நீதவான் நீதிமன்றம், கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பெலவத்த ஜேவிபியின் தலைமைக் காரியாலயம்  உள்ளிட்ட பகுதிகளில்  தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


'அநுர கோ ஹோம்' கொழும்பில் ஒன்றுதிரண்ட எதிர்க்கட்சிகள்; ஆதரவாளர்களால் கூச்சலிட்டு குழப்பம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம் தொடர்பில் தற்போது கொழும்பில் ஒன்று திரண்டுள்ள ரணில் ஆதரவாளர்களால் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  இதன்போது, “அநுர கோ ஹோம்”  என்ற கூச்சல்களோடு அங்கு ஒன்று திரண்டுள்ளவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினரும் கொழும்பில் ஒன்று திரண்டு எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், கொழும்பு கோட்டை  நீதவான் நீதிமன்றம், கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பெலவத்த ஜேவிபியின் தலைமைக் காரியாலயம்  உள்ளிட்ட பகுதிகளில்  தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement